கடுக்காமுனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனின் மகர தோரண ஊர் வலம்.


(அரசையூர் சு.சிறிகரன்)

ஆதியாய் அவதரித்த ஆதிபரா சக்தியே போற்றி அறம் காக்கும் கடுவூர் நாயகியே போற்றி நீர் சூழ வீற்றிருக்கும் வித்தகியே போற்றி நிலவளம் சூழல் நல் நாயகியே போற்றி உனதருள் உலகெங்கும் பரவுக போற்றி போற்றி....

மட்டக்களப்பு கடுக்காமுனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 2ம் நாள் அன்றிரவு சடங்கினை சிறப்பிக்கும் முகமாக அம்மனின் அடையாள சின்னமாகிய மகர தோரண ஊர்வலமானது 05.07.2017 பக்தர்களின் பக்தி பூர்வமாக முறையில் சிறப்பாக இடம்பெற்றது.