மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள கல்லடி விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது காளான் உணவு உற்பத்தி பற்றிய தெளிவூட்டல்களும் காளானில் எவ்வகையான உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதுடன், உணவுகளும் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இவ் வைபவத்தில் விவசாயப் போதனாசிரியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.












