அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேரோட்டம்


(வரதன்) கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றம் 14.07.2017 அன்று ஆரம்பமாகி உற்சவத்தின் திருவிழாவான தேரோட்டம் இன்று ஆலயப்பிரதம குரு ரங்க வரதராஜச் சிவாச்சாரியார் தலைமையில் பூஜை நிகழ்வுகளின் பின் தேரோட்ட நிகழ்வு இடம்பெற்றது


இத்தேரோட்ட நிகழ்விற்கு ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா கோ~த்துடன் தேரோட்டம் இடம்பெற்றது.வடம் பிடித்தால் வாழ்வு சிறக்கும் என்பது ஆன்றோர் வாக்குக்கமைய அடியார்கள் தமது வாழ்வைச் சிறப்பாக முன்னெடுக்க பெண்கள் ஒருபுறமும் ஆண்கள் ஒருபுறமும் வடம் பிடித்திழுத்து தேரை இழுத்துச் செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாக  இருந்நதது.

மாமாங்கேஸ்வரரின் சந்நிதியில்  அடியார்களின் தங்களது  நேத்திக்கடன்களை கற்பூரச்சசட்டிகளை ஏந்தியவாறும் பூசைத் தட்டுகளை வழங்குவதிலும் அடியார்கள் மும்முரமாக ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருந்நதது. ஆலய உற்சவத்தை முன்னிட்டு  போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.