கல்லடி – உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

ஈழமணித்திருநாட்டில் குணாதிசையில் நீர்வளமும், நிலவளமும், ஆன்மீக அருள் வளமும் ஒருங்கே நிறையப்பெற்ற கல்லடி - உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ பேச்சியம்மன், வருடாந்த உற்சவம் 23.07.2017 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 31.07.2017 திருக்கும்பம் சொரிந்து 02.08.2017 இல் வைரவர் பூசை நடைபெறவுள்ளது.

24.07.2017 இல் நடைபெற்று முடிந்த பூசையில் பகல் சடங்கு திரு.பூபாலரெட்ணம் குடும்பத்தினராலும் இரவுச் சடங்கு ஊர்க்குடிமகன் திரு.மா.சுந்தரலிங்கம் அவர்களினாலும் சிறப்பாக நடைபெற்றது.

25.07.2017 – 4ம் குறிச்சி பொதுமக்கள் (கண்ணகி தாயாரிடம் செல்லல்)

26.07.2017 – 5ம் குறிச்சி பொதுமக்கள்

27.07.2017 - 1ம் குறிச்சி பொதுமக்கள்

28.07.2017 - 2ம் குறிச்சி பொதுமக்கள் (திருப்பலிச் சடங்கு)

29.07.2017 - 3ம் குறிச்சி பொதுமக்கள்

30.07.2017 – பொதுச் சடங்கு (மடிப்பிச்சை எடுத்தல், நெல் குற்றல்)

31.07.2017 - பொதுச் சடங்கு (பள்ளயம், திருக்கும்பம் சொரிதல்)

வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானினதும் பேசும் தெய்வம் பேச்சியம்மன் அருள் ஆசிகளை பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.


கல்லடி – உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பரிபாலன சபையினர்