(க.விஜயரெத்தினம்)கட்டுநாயக்க பஸ்தரிப்பிடத்தில் இருந்து கல்முனைக்கு திரும்பிக்கொண்டிருந்த தனியார் பஸ்வண்டியானது கோட்டைக் கல்லாறு பாலத்தில் விபத்துக்குள்ளானது.இச்சம்பவம் இன்று (27.7.2017) அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பாலத்திலே இது நிகழ்ந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா அவர்களுக்குரிய பஸ்வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகும்.நித்திரை மயக்கத்திலே இச்சம்பவம் நிகழ்ந்ததாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் பயணித்த அனைவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
பாலத்தின் பாதுகாப்பு அரன்கள்,நடைபாதைகள்,ஸ்ரீலங்கா ரெலிகொம் வயர்கள்,பஸ் என்பன பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த பாலத்திற்கான செலவு சுமார் மூன்று இலட்சம் என மதீப்பிடப்பட்டுள்ளது.களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

















