(வரதன்) இலங்கையிலேயே அதிக தொழில் நுட்பக் கல்லூரி இருக்கின்ற மாவட்டத்தில் தான் அதிக வேலையற்ற இளைஞர்களும் காணப்படுகின்றனர் வேலையற்ற பட்டதாரிகள் படும் வேதனை கவலையளிக்கின்றது. பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்கின்ற பாடங்கள் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பினை பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.பெற்றோர்களை விட பிள்ளைகள் அதிக தொழில் நுட்ப அறிவு கூடியவர்களாக இருக்கின்றனர் எனவே அவர்கள் மீது அக்கறையாக அன்புடன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சிந்தித்து செயற்பட வேண்டும்.அவர்களிடம் சிறு குறைகள் காணப்பட்டாலும் அன்புடன் கற்றல் செயற்பாடுகளை சகல ஆசிரியர்களும் முன்னெடுக்க வேண்டுமென மட்டு வலய கல்விப்பணிப்பாளர் K.பாஸ்கரன் தெரிவித்தார்.சிசீலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் இன்று இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கு சிறப்பு அதிதியாககலந்து கொண்ட மட்டு வலய கல்விப்பணிப்பாளர் K.பாஸ்கரன் தெரிவித்தார்.
கடந்தவருடம் கற்றல் செயற்பாடுகளில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற மாணவிகள் அதிதிகளால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இங்கு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.























