(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் , கிழக்குமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருந்துக்களஞ்சியம், மருத்துவ ஆய்வுகூடம் ஆகியன நேற்றைய தினம் 13.07.2017 (வியாழக்கிழமை) முதலமைச்சர் நஸீர் அகமட் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கருணாகரன், நடராஜா எமது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மதன், ஆகியோருடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் சியாகுல் ஹக், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்,வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் இதன் போது கலந்துகொண்டனர்.
மேலும், வைத்தியசாலைக்கு தேவையான பொருட்களும், வைத்தியசாலை கட்டிடத்திற்கான லிப்ட் (மின் தூக்கி) யும் கையளிக்கப்பட்டது.


















