கிழக்கு மாகாணத்திற்கான ஆயுட்காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில் முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சிகள் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை முதலில் நடத்தி, ஏனைய மாகாணங்களுக்கான தேர்தலை பின்னர் நடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைமைகள் மும்முரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.வடமேல், சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைகின்ற நிலையில், கிழக்கு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணத்திற்கான ஆயுட்காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில் முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சிகள் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை முதலில் நடத்தி, ஏனைய மாகாணங்களுக்கான தேர்தலை பின்னர் நடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைமைகள் மும்முரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.













