மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது .மூலஸ்தான பூஜை மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட பூஜை இடம்பெற்ற பின்பு பிள்ளையார், சிவன் மற்றும் சக்தி தெய்வங்கள் எழுந்தருளி தீர்த்தமாடியதும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தீர்த்தமாடி நேர்கடன்களை நிறைவேற்றினர்.
தீர்த்தமாடுவதற்கு முன்பாக அடியார்கள் இழந்த மூதாதையர்களை நினைவு கூர்ந்து சிவாச்சரியார்களிடம் பிதுர்க்கடன் செலுத்தினர்.

























