
(ஜனகன் ) தம்பிலுவில் சிவதொண்டர் அமைப்பினால் அப்போதைய இந்து கலாசார அமைச்சின் அனுசரணையுடன் 2002 இல் ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம பாதயாத்திரைக்கான தொடர்ச்சியான குடிநீர் விநியோக சேவையை மேலும் விரிவுபடுத்துமுகமாக இன்று மக்கள் வங்கி இந்துமா மன்றத்தால் சிவதொண்டர் அமைப்புக்கு நீர் இழுவைத் தாங்கி அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு திருக்கோவிலில் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் மக்கள் வங்கி இந்துமா மன்ற உறுப்பினர்கள் மற்றும் திருக்கோவில் மக்கள் வங்கி முகாமையாளர், காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர், மருதமுனை மக்கள் வங்கி முகாமையாளர், பொத்துவில் மக்கள் வங்கி முகாமையாளர் மற்றும் சிவதொண்டர் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அன்பளிப்புக்கு பங்களிப்பு வழங்கிய அணைத்து மக்கள் வங்கி உத்தியோகஸ்தர்களுக்கும் அமைப்பின் மனமார்ந்த நன்றிகள் அத்தோடு அமைப்பின் வெற்றிப்பாதைக்கு வழியமைத்த எங்களுடைய ஆரம்பகால உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என அமைப்பின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்











































