இணையத்தளத்தின் செய்தி தொடர்பான கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளரின் மறுப்பு

(அசுவத்தாமா)
கடந்த 19.07.2017 அன்று கௌரவ பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்ட கோறளைப்பற்று பிரதேச செயலாளரினால் நடாத்தப்பட்ட கூட்டம் தொடர்பாக பற்றி நியூசில்  எழுதப்பட்ட கட்டுரைக்கு பின்வருமாறு எனது மறுப்பைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மட்.ககு.முறாவோடை சக்தி வித்தியாலயம் எனும் பாடசாலையின் காணி விவகாரம் மிக நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினையாகும். இது தொடர்பாக 24.07.2017 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வினவப்பட்டபோது எம்மிடமுள்ள ஆவணங்களின்படி இக்காணி பாடசாலைக்குரியது எனவும் இதில் எழுந்துள்ள பிரச்சினை தனிநபர்களுடன் தொடர்புபட்டுள்ளதால் எமது திணைக்களம் சார்ந்து நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டேன்.

பிரச்சினையை  பூதாகரமாக்கியது தொடர்பில் எந்தவொரு கல்வித் திணைக்கள அதிகாரிக்கும் பொறுப்பில்லை. இதனை 19.08.2017 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்தேன். அப்போது கௌரவ பிரதி அமைச்சர் அவர்கள் சரி சரியெனக் கூறி என்னை ஆசனத்தில் அமருமாறு கூறினார் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

தி.ரவி
வலயக்கல்விப் பணிப்பாளர்,
கல்குடா கல்வி வலயம்.