கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்


கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வேலையற்ற பட்டதாரிகளை
மாவட்டரீதியில் ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை கோரியுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை
ஆசிரியர் சேவை 3-1(அ) க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு
விண்ணப்பங்களைக்கோரியுள்ளது.

கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட பட்டதாரிகள் மாவட்ட ரீதியாக
போட்டிப்பரீட்சை மூலம் ஆசிரியராக சேர்த்துக்கொள்வதற்காக இவ்விணப்பம்
கோரப்பட்டிருப்பதாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜி.திசாநாயக்க
தெரிவித்தார்.

விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 21.08.2017 ஆகும் . விண்ணப்பப்படிவங்களை
கிழக்கு மாகாண இணையத்தளத்தில் http://www.ep.gov.lk/Recruitment.asp எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியுமென
அறிவித்துள்ளார்.

 கிழக்கு மாகாணத்தில் 1441 பட்டதாரிகளை ஆசிரியராகச்
சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் மிகவிரைவில் கோரப்படவிருக்கிறது என கிழக்கு
மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 40வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு
கிழக்கு மாகாண ஆளுநர் பொதுச்சேவை ஆணைக்குழுவைப்பணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் கிழக்கில் போராட்டத்திலீடுபட்டிருநத 40-45வயதுக்கிடைப்பட்ட சுமார்
70பட்டதாரிகள் இவ்வயது வரம்பினால் பாதிக்கப்படவுள்ளனர்.

எனவே இவ்வயதெல்லையை
45ஆக அதிகரிக்கவேண்டுமென பரவலாக கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.