
(தம்பட்டை நிருபர்)
வவுனியாவில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக பஸ்வண்டியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவை எடுத்த வந்த இரு கஞ்சா வியாபாரிகளை மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் வைத்து சனிக்கிழமை (26) பிற்பகல் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் .
பொலிசாருக்கு தகவல் வழங்குபவர் ஒருவரை வைத்து அவர் கஞ்சா வாங்குவதாக கஞ்சாவை வாழைச்சேனை நாவலடி பகுதிக்கு எடுத்துவருமாறு தெரிவித்து சம்பவதினம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் நிலை குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி சப் இன்பெஸ்;டர் ரி. மேனன் தலைமையிலான பொலிசார் காத்திருந்தனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் அக்கரைப்பற்று பஸ்வண்டியில் குறித்த நபர்கள்பிரயாணம் செய்து நாவலடி பகுதியில் இறங்கி குறித்த கடைக்கு கஞ்சாவை எடுத்து வந்த நிலையில் பொலிசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன்இவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கேரளா கஞ்சாவை மீட்டனர்இதில் கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனவும்கஞ்சா வியாபாரிகள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.















