மட்/ விவேகானந்தா மகளீர் கல்லூரியின் வரலாற்றுச் சாதனை விழா

மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் கல்லூரியில் சாதனை படைத்தவர்களுக்கு  கௌரவிக்கும் நிகழ்வு 03.08.2018 அன்று பி.ப 3.30 மணிக்கு கல்லூரி சமூகத்தினரால் திரு.எஸ். சந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடாத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ திரு.கோவிந்தன் கருணாகரம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சாதனை படைத்தவர்களை அனைவரும் கலந்து கொண்டு பாராட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.