தாந்தாமலை முருகனுக்கு முனைக்காடு மக்களின் திருவிழாவும் தீர்த்தோற்சவ பெருவிழாவும்


(தமிழன்)

தாண்டவகிரி என்று வரலாற்று சிறப்பு பெருமை கொண்ட தேசத்து ஆலயமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கடந்த 17.07.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவமானது 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை முனைக்காடு கிராம மக்களினால் இறுதிநாள் திருவிழா சிறப்பாக நடாத்தப்பட்டு 07.08.2017 திங்கட்கிழமை காலை திருவோண நட்சத்திரம் கூடிய சுபமுகூர்த்த வேளையிலே 6.00 மணிக்கு முருகப்பெருமானின் புண்ணிய தீர்த்த உற்சவமானது பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்த லட்சக்கணக்கான அடியார்களின் பங்குபற்றுதலுடன் உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில்நடைபெற்று, நேற்றைய தினம் கொடியிறக்கத்துடன் இனிது நிறைவு பெற்றுள்ளது.