(சித்தா)
கல்குடா கல்வி வலயத்தில் ஆரம்ப தரங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் தொழில் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் 21.08.2017, 22.08.2017 ஆகிய இரு தினங்களும் காலையில் இருந்து மாலை வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி.ரவி அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பக் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கே.யோகராசா இச் செயலமர்வினை நெறிப்படுத்தினார். இச் செயலமர்வானது உலக தரிசன நிறுவன அணுசரனையில் சுமார் 50 ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற்றது.
இச் செயலமர்வின் போது வகுப்பறை முகாமைத்துவம், பாடங்களைத் திட்டமிடல், ஆரம்ப விஞ்ஞானச் செயற்பாடுகள், தமிழ் மொழி கற்பிக்கும் நுட்பங்கள் என பல விடயங்கள் முன் வைக்கப்பட்டன. இச் செயலமர்வின் கல்குடா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ரி.அனந்தரூபன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



















