'மனித வாழ்க்கையை பாதிக்கும் தகைப்பு '


ஒருவர் உயிரியல், உளவியல் சூழலுக்குப் பொருத்தப்பாடு அடைய முடியாமல், உடல் உள சஞ்சலத்துக்கு உட்படுவதே தகைப்பு ஆகும். தகைப்பு ஏற்படுவது தனியாளின் ஆளுமையையும் சூழலையும் பொறுத்தாகும். தகைப்பைச் சமாளித்து தாங்கிக்கொள்ளும் சக்தி ஆளுக்கு ஆள் வேறுபட்டுக் காணப்படும். ஒருவரால் சூழல் எவ்வாறு புலக்காட்சி பெறப்படுகின்றது என்பது அவரின் ஆளுமையைப் பொறுத்தது. ஒருவர் சூழலில் ஏற்படும் சம்பவங்கள் தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியனவாகவும், அழுத்தம் தருவனவாகவும் புலக்காட்சி பெற்று, அதற்கத் துலங்கும் செயன்முறை தகைப்பு எனக் கூறப்படுகின்றது.

ஓரளவு தகைப்பு, வாழ்க்கையில் தவிர்கக முடியாதது! சிறப்புடன் செயற்படுவதற்கும் தேவையானது. ஒருவர் சிறப்புடன் செயற்பட, உச்சநிலை பெற, ஊக்குவிக்கப்பட தகைப்பு தேவையானது. தகைப்பின் வலுகூடிய அளவில் உள்ளதாகவும் நீடித்துத் தொடரும்போதும், தகைப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து நேரிடும்போது உள, உடல் பாதிப்பு  ஏற்படுகின்றது. ஒருவர் தகைப்பைக் கட்டுப்படுத்த அல்லது சமாளிக்கத் தவறும் போது அதன்விளைவுகள் உடலிலும் உள்ளத்திலும் வெளிப்படும்.

மாணவர் பலவகையான தகைப்புக்கு உட்படுத்தப்படுவதால் அவர்களின் கல்வி, மனவெழுச்சி ஆகியன பாதிப்புக்கு உள்ளாகின்றன. மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை வழங்குவதன் மூலம் தகைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.ஒருவர் தகைப்பு ஏற்பட நடந்துகொள்ளும்போது, தகைப்பு ஏற்படின் அதைச் சமாளிக்கத் தவறும்போது அதன் விளைவுகள் அவரது உடலிலும் உள்ளத்திலும் வெளிப்படும்.


உடல் சார்பான விளைவுகள் :

தகைப்பு ஏற்படும்போது ஒருவரின் நரம்பு மண்டலமும், கானில்சுரப்பிகளும் (Neuro – Endocrine System) தூண்டப்படுகின்றன. இதனால் GAS – General Adaptation Synduome  ஏற்படுவதனால், உடலின் தசைநார்கள் இறுகுதல், ஓமோன்கள் அளவுக்கதிகமாகச் சுரத்தல், இருதயம் நார்கள் இறுகுதல். ஓமோன்கள் அளவுக்கதிகமாகச் சுரத்தல், இருதயம் வேகமாக அடித்தல், மூச்சுத் திணறல், நா உலர்தல், தேகம் நடுங்குதல், வியர்த்தல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் உடல்சார்பான விளைவுகளான தலையிடி, நாரிப்பிடிப்பு, குடற்புண், சமிபாட்டின்மை, உணவை அளவுக்கதிகமாக அல்லது மிகக்குறைவாக உட்கொள்ளுதல், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், இழுப்புநோய், சருமம் சார்ந்த நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.

உளம்சார் விளைவுகள் :
ஒருவர் தனக்கு உடலியல் உளவியல் சார்பாக ஏற்படும் அழுத்தங்கள் அளவுக்கு மீறிவிட்டன அவற்றைத் தன்னால் மேலும் சமாளிக்க முடியாது என்ற உணர்வு ஏற்படுவதால், அவரது உள்ளம் பாதிக்கப்படுகின்றது. இதனால் பதகளிப்பு, காரணமற்ற பயங்கள், நித்திரயின்மை ஆகியன ஏற்படுகின்றன. உளச்சோர்வு ஒருவரைத் தற்கொலைக்கு இட்டுச்செல்லக் கூடியது. மற்றும் புகைத்தல், மதுபானம், போதைப்பொருள் பாவனையில் ஈடுபட ஆரம்பித்தல், ஏற்கனவே இப்பழக்கமுடையோர் அளவுக்கதிகமாக ஈடுபட்டு அவற்றுக்கு அடிமைப்படல், திறம்பச் செயலாற்றவும் கற்கவும் முடியாமை போன்றவையும் தகைப்பினால் ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தகைப்பு ஏற்படின், தகைப்பினால் அவர்களது உடலில் சுரக்கும் ஓமோன்கள் வளர்ந்துவரும் நுகத்தைப பிறப்புக்கு முன்பு  பாதிக்கும். தகைப்பு அதீத நிலையை அடையும்போது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அதனைச் சமாளிக்க முடியாமல் அழுத்தத்தின் கீழ் இடிந்து போவதால் நரம்புக் கோளாறுகளும் உளக்கோளாறுகளும், திடீர் மரணங்களும் ஏற்படலாம்.

தகைப்பை ஏற்படுத்தும் காரணிகள் :

(1) ஆளுமைக்காரணி – தகைப்பின் வலுவும் தாக்கமும் ஒருவரின் ஆளுமையைப் பொறுத்தது. மனத்திடமற்ற, மனவெழுச்சி சமநிலையற்ற ஆளுமையுடையோர் தகைப்பினால் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. ஆளுமையை யு வகை, டீ வகை (வுலிந யுஇ வுலிந டீ) என இடண்டாகப்பிரித்துள்ளனர். யு வகை ஆளுமையைக் கொண்டோர் மிகுந்த போட்டி மனப்பான்மை, பொறுமையின்மை, ஓய்வின்றித் தொழிலில் ஈடுபடுதல், கடினஉழைப்பு, அவசரத்தன்மை போன்ற பண்புகளையுடையவர்கள். டீ வகை ஆளுமையைக் கொண்டோர் இதற்கு நேர்மாறாக பண்புகளைப் பெற்றிருப்பர்.

(2) இயற்கை, செயற்கை அனர்த்தங்கள் - பூகம்பம், புயல், வெள்ளம், யுத்தம், கலவரம் ஆகியன.

(3) மனவெழுச்சி சார்பான காரணிகள் - வாழ்க்கைச் சம்பவங்கள், நெருங்கிய உறவினரின் மரணம், இழப்பு, பிளவுபட்ட குடும்பம், விவாகரத்து, தனிமையாக வாழ்தல், விபத்து, நீண்டகால நோய்வாய்ப்படுதல், தொழிலை ஊதியத்தை இழத்தல் போன்றவை.

(4) நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் - குடும்பச் சண்டைகள், வேலைப்பளு, நெருக்கடிநேரப் பிரயாணம் போன்றவை.

(5) புகைத்தல் மதுபானம் போதைப்பொருள் பாவனை.

தகைப்பைத் தவிர்ப்பதற்கான வழிவகைகள் :

(1) சிறந்த வாழ்க்கைத் தத்துவம், சமய நம்பிக்கை, இலட்சியங்கள், விழுமியங்கள், சாதகமான மனப்பாங்குகள் ஆகியவற்றை விருத்தி செய்து, மனத்திருப்தியுடனும் மனச்சாந்தியுடனும் வாழ்க்கை நடாத்துதல். இவற்றை மேற்கொள்ளுவதால், அன்பு, பொறுமை, சாந்தம், சிநேகத்தன்மை போன்ற சாதகமான மனவெழுச்சிகள் உடலில் நல்மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

(2) நெருக்கடி நிலைகள் சவால்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாவிடின், அவற்றைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை விருத்தி செய்தல்.

(3) கடந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாமை.

(4) தனது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடாதிருத்தல்.

(5) அதிக வேலைகளில் ஈடுபடாமை. ஒரு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் பத்து மணித்தியாலம் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு ஒன்றரை நாள் ஓய்வு தேவையாகும். கணனியில் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு இடையில் ஒரு மணி நேர ஓய்வு அவசியம்.

(6) நாளாந்தம் ஏழு அல்லது எட்டு மணி நேரம் இரவு நித்திரையும், பகலில் அரை அல்லது ஒரு மணிநேர சிறு தூக்கமும் தேவை இரவில் நித்திரைக்குச் செல்லும்போது கவலையுடன் செல்லாமை, இரவில் நித்திரைக்குச் செல்லும்போது கவலையுடன் செல்லாமை.

(7) புகைத்தல், மதுபானம், கோப்பி போன்றவற்றின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தல்.

(8) குடும்ப உறவுகளையும் நண்பர்களின் நடபையும் சுமூகமாகப் பேணுதல்.

(9) ஆரோக்கியத்தைத் தரும் போசாக்குள்ள உணவுப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ளுதல்.

(10) நாளொன்றுக்கு 20 முதல் 45 நிமிடங்கள் வரை தேகபாப்பியாசம், உலாவச்செல்லுதல் போன்றவற்றில் ஈடுபடல்.

(11) தளர்ச்சிப் பயிற்சிகள் மூலம் உடலையும் உள்ளத்தையும் தளரச்செய்து, தசைநார்களின் இறுக்கத்தைக் குறைக்கும் அப்பியாசங்கள், உடலைப்பிடித்து விடுதல், மூச்சுப்பயிற்சிகள், தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல் ஆகியவற்றால் மனஇறுக்கம், தகைப்பு போன்றவை குறைகின்றன.

மாணவர் சமுதாயத்தில் தற்கொலை விகிதம் கூடிக்கொண்டு வருவதற்குத் தகைப்பே காரணம் என ஆய்வுகள் வலியுறுத்துகின்றன, தகைப்பு ஏற்படாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தகைப்பு ஏற்படின் அதற்குப் பரிகாரம் காண்பதற்கும் வழிகாட்டல் ஆலோசனை மிகுந்த பயனுள்ளது.

யேசுஐயா டிலானி
உதவி விரிவுரையாளர்,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்