மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயத்திற்கு தரிசிக்க சென்றபோது, ஆலய பகுதியில் நிறுத்திவைத்த முச்சக்கரவண்டி திருட்டுப்போயுள்ள சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கதிர்காமர் வீதி மட்டிக்கழியைச் சேர்ந்த எஸ்.றமேஸ்குமார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது முச்சக்கரவண்டியில் குடும்ப சகிதம் ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு ஆலயத்திற்கு சென்று தங்கியிருந்து திங்கட்கிழமை காலை தீர்த்த உற்சவம் முடிவடைந்ததும் வீட்டிற்குச் செல்வதற்காக தனது முச்சக்கரவண்டி நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது குறித்த முச்சக்கரவண்டியை அங்கு காணவில்லை.
தனது முச்சக்கரவண்டியின் திறப்பு மற்றும் வாகன காப்பறுதி , வாகன அனுமதிப்பத்திரம் என்பன தன்னிடம் உள்ள நிலையில் தனது முச்சக்கரவண்டி திருட்டுப்போயுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், திருட்டு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.













