கிழக்கின் வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் உள்ள சிற்றூழியர்கள் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி

கிழக்கு மாகாணத்தில் உள்ள   சிற்றூழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வனைப் பெற்றுக்கொடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  அஹமட்  தெரிவித்தார்.

தற்போது  கிழக்கின் பெருமளவான வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் சிற்றூழியர் பற்றாக்குறை தொடர்கின்றமையானது  மக்களுக்கான சேவைகள் சென்றடைவதில் உள்ள தடங்கலாகவே  கருதவேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

திருகோணமலை  இலங்கை துறைமுகப்பட்டணத்தில் ஆரம்ப வைத்திய சிகிச்சைப் பிரிவுக்கான  அடிக்கல் நாட்டு  நிகழ்வில் பிரதம  அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

8.2 மில்லியன் ரூபாசெலவில்   இந்த ஆரம்பவைத்திய சிகிச்சைப் பிரிவு  நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இந்த நிகழ்வில்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர்,கிழக்கு மாகாண கல்விமைச்சர் எஸ் தண்டாயுதபானி உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நாகேஸ்வரன் மற்றும் ஜனார்த்தன்ன்  ஆகியோரும்  இதன்போது  கலந்துகொண்டனர்