வைத்­தியக் கல்­விக்­கான குறைந்த பட்ச தகைமை இரு வாரங்­களில் வர்த்­த­மா­னியில்.!


வைத்­தியக் கல்­விக்­கான குறைந்த பட்ச தகைமை தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலை, இரு வாரங்­க­ளுக்குள் வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

நேற்று காலியில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சிலர் தனியார் மருத்­துவக் கல்­வியை எதிர்க்­கின்­றனர். ஆனால் எமது நாட்­டி­லுள்ள பல வைத்­தி­யர்கள் வெளி­நாட்டில் கற்­ற­வர்கள். வெளி­நா­டு­களில் தனியார் வைத்­தியக்கல்­லூரி விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் அதற்கு தனிப்­பட்ட கார­ணங்­களை காட்டி முடக்­கு­கின்­றனர். அது அவர்­களின் தனிப்­பட்ட நோக்­கத்­துக்­காக மட்­டுமே.

அர­சாங்கம் சப்­ர­க­முவ, வடமேல் மற்றும் மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கங்­களில் வைத்­திய பீடத்தை நிறுவ திட்­ட­மிட்­டுள்­ள­தோடு, இதன் நிமித்தம் இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லையை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்­ளது. குளி­யாப்­பிட்­டிய ஆதார வைத்­தி­ய­சா­லையை போதனா வைத்­தி­ய­சா­லை­யாக அபி­வி­ருத்தி செய்­ய­வுள்­ளது. நாம் இந்­நாட்டில் உள்ள இல­வச சுகா­தா­ரத்­து­றையை பாது­காக்க தேவை­யான அனைத்து வேலைத்­திட்­டங்­க­ளையும் செய்­கின்றோம். ஆனால் அவ் வேலைத்­திட்­டங்­களை குறை­கூறி பழ­கி­ய­வர்­க­ளுக்கு எங்­களால் எதுவும் செய்ய முடி­யாது.

தற்­போது சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­தி­லுள்ள வைத்­திய கல்­விக்­கான தகுதியை இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடவுள்ளோம். இதன்மூலம் வைத்திய கல்விக்கான அனைத்து தராதரங்க ளையும் அனைவரும் அறிந்துகொள்ள முடியும் என்றார்.