
(இ.சுதாகரன்)
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட பெரிய கல்லாறு சமுர்த்தி வங்கி தமது பயனாளியான மேரி ரொபேக்கா நோயல் என்பவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்ட ரூபா ஐம்பதனாயித்தினைக் கொண்டு குறித்த பெண் பழக் கடை ஒன்றினை இன்றைய தினம்(14) திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.
இதன் போது கடையிலிருந்து முதலாவதாக பொருட் தொகுதியினை பிரிவுக்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இரா.பிறேமராஜன் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.












