(தமிழன்) இலங்கையில் காணப்படும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் சமாதான நீதவானாக செயற்பட முடியும் என கடந்த 18.02.2017 அன்று வெளியிடப்பட்ட 1954/34ம் இலக்க வர்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தாம் கடமையாற்றும் கிராம அலுவலர் பிரிவு அமைந்துள்ள பிரதேச செயலகப்பிரிவினுள் இப்பதவியின் பிரகாரம் மக்களுக்கான கடமைகளை மேற்கொள்ளவே இப்பதவி நாட்டின் ஜனாதிபதியின் சட்டத்தரணியும் கௌரவ நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.
இந்நியமனத்தை அடுத்து தமது பிரதேச செயலக மக்களுக்கான கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் பொருட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களும் நேற்றைய தினம் (24) மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி மா.கணேசராஜா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


















