(காரைதீவு நிருபர் சகா)
இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு (2015.2016) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத்தோற்றிய 812பேரில் 306 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இப்பதவிக்கு 515 வெற்றிடங்கள் நிலவுவதாகக்குறிப்பிட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2016.07.09 இல் போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டது. பரீட்சைமுடிவுகளின்படி 812பேர் நேர்முப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு தற்போது 306 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 26ஆம் திகதி வழங்கப்படுமெனவும் பொதுச்சேவை ஆணைக்குழு கடிதமூலம் அறிவித்துள்ளது.
இப் தெரிவுப்பட்டியல் நேற்று பொதுச்சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியாகியது. தெரிவான 306பேரினதும் பெயர் அடையாளஅட்டை இலக்கம் பாடம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் 209வெற்றிடங்கள்!
அதன்படி இ.க.நி.சேவை தரம் 3 மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை ரீதியில் இன்னும் 209 வெற்றிடங்கள் நிரப்பப்படாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொது ஆளணியில் 77பேரும் ஆரம்பக்கல்வித்துறையில் 40பேரும் உடற்கல்வித்துறையில் 32பேரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தலா 29பேரும் சிங்களப்பாடத்திற்கு 18பேரும் பௌத்தசமயத்திற்கு 16பேரும் கணிதபாடத்திற்கு விசேடகல்விக்கு 11பேரும் 10பேரும் வரலாற்றிற்கு 08பேரும் விஞ்ஞானத்திற்கு 04 பேரும் மேலும் சிலர் சில பாடத்துறைகளுக்கு தெரிவாகியுள்ளனர்.
எவருமே தெரிவாகவில்லை!
திட்டமிடல் துறைக்கு 31ஆளணி வெற்றிடமிருந்தும் இம்முறை யாரும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்துசமயத்துறைக்கு 3 வெற்றிடமிருந்தும் யாரும் தெரிவாகவில்லை. பொறியியல்தொழினுட்பத்துறைக்கு 2 வெற்றிடமிருந்தும் யாரும் தெரிவாகவில்லை.
போட்டிப்பரீட்சை!
இப்பதவிக்கான போட்டிப்பரீட்சை கடந்தவருடம் யூலை மாதம் 09ஆம் திகதி கொழும்பில் நடாத்தப்பட்டது. 515வெற்றிடங்களை நிரப்பவென விண்ணப்பம் கோரப்பட்டு இப்பரீட்சை நடாத்தப்பட்டது.
நேர்முகப்பரீட்சைக்கு 812பேர் அழைக்கப்பட்டார்கள். நேர்முகப்பரீட்சையானது இவ்வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் திகதியிலிருந்து பெப்ருவரி மாதம் 22 ஆம் திகதி வரை கொழும்பு இசுருபாய கல்வியமைச்சில் நடைபெற்றது.
நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியோரில் 186 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மீதி 31 முஸ்லிம்களும் 89 தமிழர்களும் தெரிவாகியுள்ளனர்.
காரைதீவில் இருவர் தெரிவு!
காரைதீவிலிருந்து கணிதத்துறைக்கு ஆனந்தகுமாரசுவாமி சஞ்சீவனும் தகவல் தொழினுட்பத்துறைக்கு ஆறுமுகம் பார்த்தீபனும் தெரிவாகியுள்ளனர்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி ஆசிரியரான ஆ.சஞ்சீவனும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி ஆசிரியரான ஆ.பார்த்தீபனும் தெரிவாகியுள்ளனர்.
இறுதியாக காரைதீவிலிருந்து இ.க.நி.சேவை திறந்த போட்டிப்பரீட்சையிலிருந்து திருமதி தனுசியா ராஜசேகர் (காரைதீவு) செல்வி.நேசராஜா வரணியா (காரைதீவு) சோதீஸ்வரன் சுரநுதன் (காரைதீவு)ஆகியோர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரமுனையின் முதல் கல்விநிருவாகசேவையாளர்!
வீரமுனையிலிருந்து பூபாலபிள்ளை பரமதயாளன் முதல் கல்விநிருவாக சேவையாளராகத் தெரிவாகி வரலாறுபடைத்துள்ளார்.
வீரமுனைக்கிராமத்தில் இதுவரை இலங்கை கல்வி நிருவாகசேவையிலே இலங்கை நிருவாகசேவையிலோ யாருமே தெரிவாகியிருக்கவில்லை. எனவே வீரமுனையின் முதலாவது இலங்கை கல்வி நிருவாக சேவையாளர் என்ற பெருமையை பூ.பரமதயாளன் பெறுகிறார்.
வீரமுனையைச்சேர்ந்த இவர் வீரமுனை ஆர்.கே.எம். மகாவித்தியாலயத்தில் பிரதிஅதிபராகக்கடமையாற்றிவருகிறார்.இவர் இலங்கை அதிபர்சேவையில் தற்போதிருப்பது குறிப்பிடத்தக்கது.