(காரைதீவு நிருபர் சகா)
இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு (2015.2016) இம்முறை தெரிவான 306 உத்தியோகத்தர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(26) செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு பி.எம்.ஐ .சி.எச்.இல் நடைபெறவுள்ளது.
கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு நியமனக்கடிதங்களை வழங்கிவைக்கவுள்ளார். இன்றே அவர்கள் கடமையைப்பொறுப்பேற்கவுள்ளனர்.
அவர்களுக்கான திசைகோட்படுத்தும் செயலமர்வு இன்று பிற்பகல் மகரகம தேசிய கல்வியியல் கல்லூரியில் பதிவுடன் ஆரம்பமாகின்றது.
இப்பயிற்சி தொடர்ந்து 29ஆம் திகதி வரை 3 தினங்கள் இடம்பெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இவர்களுக்கான 3மாதகால தொடர்பயிற்சி நெறி அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.
அதன்பின்னர் 2018 ஜனவரி முதல் நாட்டிலுள்ள கல்விக் காரியாலயங்களில் நிருவாகசேவையில் இவர்கள் அமர்த்தப்படுவார்கள்.
இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு (2015.2016) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத்தோற்றிய 812பேரில் 306 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கடந்தவாரம் பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இப்பதவிக்கு 515 வெற்றிடங்கள் நிலவுவதாகக்குறிப்பிட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2016.07.09இல் போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டது. பரீட்சைமுடிவுகளின்படி 812பேர் நேர்முப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு தற்போது 306பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி இ.க.நி.சேவை தரம் 3 மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை ரீதியில் இன்னும் 209 வெற்றிடங்கள் நிரப்பப்படாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொது ஆளணியில் 77பேரும் ஆரம்பக்கல்வித்துறையில் 40பேரும் உடற்கல்வித்துறையில் 32பேரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தலா 29பேரும் சிங்களப்பாடத்திற்கு 18பேரும் பௌத்தசமயத்திற்கு 16பேரும் கணிதபாடத்திற்கு விசேடகல்விக்கு 11பேரும் 10பேரும் வரலாற்றிற்கு 08பேரும் விஞ்ஞானத்திற்கு 04பேரும் மேலும் சிலர் சில பாடத்தறைகளுக்கு தெரிவாகியுள்ளனர்.
திட்டமிடல் துறைக்கு 31ஆளணி வெற்றிடமிருந்தும் இம்முறை யாரும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்துசமயத்துறைக்கு 3வெற்றிடமிருந்தும் யாரும் தெரிவாகவில்லை. பொறியியல்தொழினுட்பத்துறைக்கு 2வெற்றிடமிருந்தும் யாரும் தெரிவாகவில்லை.
இப்பதவிக்கான போட்டிப்பரீட்சை கடந்தவருடம் யூலை மாதம் 09ஆம் திகதி கொழும்பில் நடாத்தப்பட்டது. 515வெற்றிடங்களை நிரப்பவென விண்ணப்பம் கோரப்பட்டு இப்பரீட்சை நடாத்தப்பட்டது.
நேர்முகப்பரீட்சைக்கு 812பேர் அழைக்கப்பட்டார்கள்.
நேர்முகப்பரீட்சையானது இவ்வருடம் ஜனவரி மாதம் 30ஆம் திகதியிலிருந்து பெப்ருவரி மாதம் 22ஆம் திகதி வரை கொழும்பு இசுருபாய கல்வியமைச்சில் நடைபெற்றது.
நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியோரில் 186 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மீதி 31 முஸ்லிம்களும் 89 தமிழர்களும் தெரிவாகியுள்ளனர்.
கல்முனைப்பிராந்தியத்தில் வரலாற்றில் முதற்றடவையாக 15பேர் இச்சேவைக்கு இம்முறை தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.