இரு மதப் பிரிவினருக்கிடையில் கைகலப்பு ! நால்வர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவில் இரு மதப் பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்குள்ளான 4பேர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (17) காலை வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள மருதநகர் மற்றும் பேத்தாழை  போன்ற பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

மருதநகர் பகுதியில்  உள்ள    வீடு ஒன்றில் சில மாதங்களாக வாராந்தம்   வெள்ளி, சனி  ஞாயிறு நாட்களில் வழிபாடு இடம்பெற்றுள்ளது . இதனருகே வசிக்கும் மக்கள் இங்கே இதை நடத்த வேண்டாம்   தேவாலயங்களில் சென்று வழிபடுங்கள் என கூறி வந்துள்ளனர்.  இப்படியே வந்த வாய்த்தர்க்கம் பின்பு கைகலப்பாக மாறியுள்ளது .  அதில் காயமுற்ற ஒருவரை இன்னொரு இளைஞன்  வைத்தியசாலைக்கு கூட்டி சென்றுள்ளான்  . சம்பவத்தை போதகர் ஒருவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் .  சம்பவத்தை கேள்வியுற்ற போதகர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் . அங்கே வந்த இளைஞனை போதகரும் அவருடன் வந்த ஏனையவர்களும் தாக்கியுள்ளனர் ,  இளைஞனது கையடக்க தொலைபேசியையும் எடுத்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் கூறினார்.

பின்பு மருதநகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர்   பேத்தாளையில் உள்ள தேவாலயத்திற்கு சென்று அங்கு இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாளக தெரிவித்தனர்.


இதன் காரனமாக பலத்த காயங்களுக்குள்ளான இரு தரப்பினரையும் சேர்ந்த 4பேர்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் இரு பெண்கள் அடங்குவர்.;
கல் வீச்சு சம்பவத்தினையடுத்து வழிபாட்டு தளங்களின் ஜன்னல் மற்றும் கூரைப் பகுதியில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இது தொடர்பாக கல்குடா பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் வாகரை பிரதேசத்தில் சேமக்காலை காணி தொடர்பாக இரு பிரிவினருக்கிடையில் அமைதியற்ற சூழ் நிலை காணப்பட்டது இதனால் வாகரை திருமலை வீதியில் போக்குவரத்து சிரிது நேரம் தாமதமானதாகவும்  வாகரை பொலிசாh ;நிலமைகளை  வழமைக்கு கொண்டு வந்ததாகவும் வாகரை பொலிசார் தெரிவித்தனர்.