மட்டக்களப்பு கொம்மாதுறையில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திக்கான வேலைத் திட்டம்!


மட்டக்களப்பு - கொம்மாதுறையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் ஊடாக கொம்மாதுறை பொது மயானம் சுத்தம் செய்யப்பட்டது.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று   (24) செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்மாதுறை வடக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொம்மாதுறை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு  ஆகிய பிரிவுகளுக்கான  பொது மயானம் சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் வரை நடைபெற்ற  டெங்கு ஒழிப்புக்கான சிரமதான பணிகள் அங்கு கலந்து கொண்டவர்களால்  மிகவும் மும்முரமாக  முன்னெடுக்கப்பட்டது.

"டெங்கு நோய்த் தொற்றை மேலும்  குறைத்துக் கொள்வோம்" "நுளம்பு பெருகும் நீர்  தேங்கக் கூடிய இடங்களை அகற்றுவதற்கு ஒன்றுபடுவோம்" எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில்

கொம்மாதுறை வடக்கு கிராம உத்தியோகத்தர் கி.டி.பாஸ்கர், கொம்மாதுறை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பி.பேரின்பம்,  கொம்மாதுறை சமூர்த்தி உத்தியோகத்தர் ஸ்ரீபானு பாஸ்கரிதேவி, கொம்மாதுறை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பஸ்மி அத்துடன் ஏனைய பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் கொம்மாதுறை வடக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கொம்மாதுறை மேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.