மட்டக்களப்பிலிருந்து வவுணதீவு ஊடாகவும் செய்கலடியிலிருந்து நகர்களிலிருந்து பதுளைவீதி கரடியனாறு ஊடாகவும் பாதயாத்திரை இடம்பெற்றது.
வவுணதீவு ஊடாக சுமார் 20 கிலோமிற்றர் தூரத்திற்கு மேல் சென்ற பாதயாத்திரியர்களுக்கு பலராலும் தாகசாந்தி நிலையம் அமைத்து தண்ணீர் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டது.
இதில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தால் (அனைத்து உத்தியோகத்தரக்களாலும்) பாதயாத்திரியர்களுக்கு குளிர்பானமும் 2ஆயிரம் உணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இப் பணி கடந்த பல வருடங்களாக வருடாவருடம் இவர்களால் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.












