மட்டக்களப்பு மாநகர சபையினால் திருப்பெருந்துறை பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையினால் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் வழக்கை 14 நாட்களுக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பெருந்துறை பகுதியில் காணப்படும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டப்படும் குப்பைகளால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.