இலங்கையில் டெங்கு நோயினால் இதுவரையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காகும். அதேபோன்று 15 முதல் 22 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் இந்நோயின் தாக்கத்தால் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வாரம் இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஜயசுந்த பண்டார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் மாத்திரம் 1 இலட்சத்து 51 ஆயிரத்தி 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 390 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இதுவரையில் உயிரிழந்த ஆண்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு பெண்கள் இறந்துள்ளனர்.
அதேபோன்று 15 வயது முதல் 22 வயதிற்கு இடைப்பட்டவர்கள் 65 வீதம் இறந்துள்ளனர். கடந்த ஐந்து வருடங்களாக 15 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களின் உயிரிழப்புக்கள் குறைவடைந்திருப்பது மகிழ்ச்சி. எனினும் இவ்வருடத்தில் 15 வீதத்தினர் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆகவே இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டிய தேவையிருக்கின்றது. அவ்வாறான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் சுகாதார அமைச்சின் ஊடாக சகல பிரதேச செயலாளர்களின் ஊடாக நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதன்விளைவாக நாட்டில் கடந்த ஜூலை மாதத்தினை காட்டிலும் அடுத்தடுத்த மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை தொடர்ந்து வருகின்றது. இதன் காரணமாக மேலும் டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். அதனை கருத்திற்கொண்டு நாளை (இன்று) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் டெங்கு விழிப்புணர்வு வாரம் அமுல்படுத்தப்பட வுள்ளது.
இவ்வாரத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைவாக டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராகவும் சட்ட நடவடி க்கை எடுக்கப்படும். பாடசாலை, பொது இடங்கள் ஆகியன தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இந்த பணிகளுக்காக நாளொன்றுக்கு 9 ஆயிரம் பேர் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் அவர்களில் பொலிஸார், இராணுவம் சுகா தார சேவை பணியாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை இணைத்துக்கொள்வத ற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.