திருப்பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய சங்காபிஷேக நிகழ்வுகள்


(சசி)
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய சங்காபிஷேக நிகழ்வானது 24.09.2017 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மஹா விஷ்ணு ஆலயமானது 31.08.2017 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மண்டலாபிஷேக பூஜைகள் இடம்பெற்றதை தொடர்ந்து. இன்று காலை பெரிய போரதீவு ஸ்ரீ வட பத்திர காளியம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி எடுத்து வரப்பட்டு, கிரிகைகள் ஆரம்பமாகி, சங்காபிஷேக நிகழ்வானது இடம்பெற்றது.

ஆலய கும்பாபிஷேக ஞாபக வெளியீட்டு நூலான 'வைகுந்தம்' ஆலய நிருவாகத்தினரால் சங்காபிஷேக நிகழ்வினை அடுத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வுகளினை திருப்பழுகாமம் கண்ணன் இந்து இளைஞ மன்றத்தினர் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.