மட்டக்களப்பு,சத்துருக்கொண்டானில் பஸ் மீது கல் வீச்சு

கொழும்பு, கட்டுநாயக்காவிலிருந்து காத்தான்குடி நோக்கி வந்த பஸ் மீது, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் வைத்து இன்று (27) அதிகாலை கற்கள் வீசப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மத்திய பஸ் டிப்போவுக்குச் சொந்தமான இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ், கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு, காத்தான்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, சத்துருக்கொண்டானில் வைத்து குறித்த பஸ்ஸின் மீது கற்கள் வீசிப்பட்டுள்ளன.

இதனால் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி மற்றும் நடத்துநர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.