மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர பாடசாலையில் 2018ம் ஆண்டு க.பொ.த. உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுவரும் செல்வி. N. Kirushika
ஆகஸ்ட் 2017 இல் நடைபெற்ற aat Sri Lanka இன் இறுதி பரீட்சையில் சித்தியடைந்து Accounting Associate எனும் இளநிலை கணக்காளருக்கான தகைமையினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Navaneethan,Anushiya தம்பதியினரின் புதல்வியான செல்வி N.Kirushika மட்டக்களப்பு HBS கல்லூரியில் யயவ கணக்கியல் கல்வியினது மூன்று, மட்டங்களையும் அவரது க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பின்னர் ஆரம்பித்து எல்லா மட்டங்களிலும் அதி சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
HBS கல்லூரியின் பிரதம நிறைவேற்று அலுவலர் ஆ. சுரேஸ்குமார் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல்,யாழ்ப்பாணம் போன்ற இலங்கையின் பிற பகுதிகளில் பாடசாலையில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்கும் போதே aat கல்வியினையும் இணைந்து கற்பதன் மூலம் க.பொ.த. உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். அதேபோல் தற்போது எமது மட்டுநகர் மாணவர்களும் aat கல்வியில் ஆர்வம் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது எனக்கூறி பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே மாணவி செல்வி. N. Kirushika எல்லா aat பரீட்சைகளிலும் சித்தியடைந்து மாவட்டத்திற்கும் தமது கல்லூரிக்கும் பெருமை சேர்த்ததை எண்ணி பெருமிதம் கொள்வதாக கூறினார்.













