செங்கலடி மத்திய கல்லூரி கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம் ;30 மாணவர்கள் சித்தி

மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரியில் இம் முறை தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில்   தோற்றிய மாணவர்களில் 30 மாணவர்கள் சித்தியடைந்து கல்குடா கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை ஈட்டியுள்ளனர்.

நேற்று வெளிவந்த புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் செங்கலடி மத்திய கல்லூரியிலிருந்து 30 மாணவர்கள வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.