மட்டக்களப்பு கொக்குவில் விக்ணேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 15 வருடங்களின் பின் சாதனை

(சித்தா)
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்/கொக்குவில் விக்ணேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுள் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளியினைப் பெற்று சாதனையை நிலைநாட்டி பாடசாலைக்கும், பாடசாலைச் சமுகத்திற்கும் நற்கீர்த்தயை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வகையில் க.கபிசானி 169 புள்ளிகளையும், தி.துசானா 163 புள்ளிகளையும், கி.சரன்னியசிவான் 154 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்
இச் சாதனையானது 15 வருடங்களின் பின்னர் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அதிபர் திரு.க.பகீரதன் தெரிவித்தார். இச் சாதனையைப் பாடசாலைக்கும், சமுகத்திற்கும் பெற்றுக் கொடுத்த மாணவர்களையும், கற்பித்து வழிநடாத்திய ஆசிரியர் திருமதி சு. கிரிதரன் அவர்களையும் வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய அதிபர் அவர்களையும் பாடசாலைக் கல்விச் சமுகம் வெகுவாகப் பாராட்டியுள்ளது. 

                                                     கி.துசானா 163
                                                  கி.சரன்னியசிவான் 154
                                                          க.கபிசானி 169