தரம் 5 புலமைப் பரீட்சையில் மட்டக்களப்பில் முதலிடம் பெற்ற வின்சன் தேசிய பாடசாலை மாணவி



(சசி,வரதன்)
வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  வின்சன் தேசிய பாடசாலை மாணவி வனராஜன் டிலுக்சிகா
191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். மாவட்டத்தின் 2ம் இடத்தினை சிவானந்தா தேசிய பாடசாலையும் மற்றும் கோட்டைமுனைப் பாடசாலை மாணவர்களும் பெற்றுள்ளனர் .
இதேவேளை மட்/ வின்சென்ற் தேசிய பாடசாலையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 50 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன்  புனித மிக்கேல் கல்லூரியில் வெட்டுப் புள்ளிக்கு மேல் 40 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

1ம் இடத்தைப் பெற்ற மாணவி பாடசாலை கற்றல் செயற்பாட்டினை ஒழுங்காக முன்னெடுத்தமையினாலும்  பெற்றோர் கற்பித்த ஆசிரியர்கள் சொற்படி கற்றல் செயற்பாட்டினை சிறப்பாக முன்னெடுத்ததனாலும் பாடசாலைக் கல்வியை முற்று முழுதாகக் கற்றதுடன் அளவுக்கதிகமான பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாமல் பாடசாலைக் கல்வியை முற்று  முழுதாக கற்றதனால் தான் இவ் வெற்றியை தான் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.  மேலும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையிலும் பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில்  நடந்து கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

இவருக்கு Battinews  சார்பாக எமது பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.