
(சசி)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தமது இந்து கலாசார கற்கைகள் நிறுவனத்தின் ஓர் அம்சமாக சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தினை அங்கூரார்ப்பணம் செய்தனர். 2017.10.06 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, நாவற்குடா கிழக்கு மாகாண இந்து கலாச்சார பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற சுவாமி விபுலானந்தர் மாநாடு அறநெறி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கர்ஜின், உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன், கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் உடுவை தில்லை நடராஜா, கல்லடி காயத்திரி பீடம் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டதுடன், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, பொலநறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இன்று கலாசார மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட விபுலானந்தர் பயிற்சி மையமானது இந்துக்களுக்குரிய கற்றலுக்கான மையமாக தொழிப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





















