மனங்களில் இருக்கின்ற வன்மங்கலெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்



இந்தத் தீபத்திருநாளிலே முதலில் எமது மனங்களில் இருக்கின்ற வன்மங்களையெல்லாம் தவிர்த்துக் கொள்வதாகவும், எமது வார்த்தைகளில் வன்மம் இருக்காத வகையில் பேசுவதாகவுமான ஒரு முடிவை நாங்கள் எல்லோரும் மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவக்கையில்,

இலங்கைவாழ் அனைத்து மக்களுக்கும் எனது தீபத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தீபத்திருநாள் உட்பட இந்ததுக்களினுடைய எல்லாத் திருநாட்களிலும் தீமையை ஒழித்து நன்மையைப் பரிபாலிக்கின்ற செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. தீமைகள் ஒழிக்கப்படுவது என்பது ஒவ்வொரு மனிதனுடைய மனங்களில் இருந்து எழ வேண்டும். ஒவ்வொரு மனதனின் மனதிலும் தீமைகளை எதிர்ப்பது என்பதை விடுத்து தீமைகளை எவ்வாறு நல்வழிப்படுத்த முடியும் என்பது தொடர்பான விடயம் எழுகின்ற போது ஒவ்வொரு வீட்டிலுமே சமாதானம் என்கின்ற விடயம் உருவாகக் கூடியதாக இருக்கும். ஒவ்வொரு வீடடிலும் உருவாகின்ற அந்த சமாதானம் இந்த நாட்டிலே ஒரு சிறப்பான நடைமுறையை கொண்டு வரக் கூடியாக இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சிறப்பான நடைமுறை, மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பன வருகின்ற போது உலக சமாதானம் என்பதும் கைக்கெட்டிவிடும்.

எனவே இந்தத் தீபத்திருநாளிலே முதலில் எமது மனங்களில் இருக்கின்ற வன்மங்களையெல்லாம் தவிர்த்துக் கொள்வதாகவும், எமது வார்த்தைகளில் வன்மம் இருக்காத வகையில் பேசுவதாகவுமான ஒரு முடிவை நாங்கள் எல்லோரும் எடுப்போமாக இருந்தால் இந்தத் திபத்திருநாள் ஊடாக எமது மூதாதையர்கள் எமக்கு காட்டிவைத்துள்ள உலக சமாதானம் அல்லது உலகத்தை நேசிக்கும் தண்மை என்பன ஏற்பட்டு உலகம் செழிப்படையும்.

 அந்தவகையில் இலங்கையைப் பொருத்தவரையில் இது மிகவும் முக்கியமாகக் கடைப்பிடிக்க விடயம். எமது எதிர்க்கட்சித் தலைவர் கூறியது போல் அடுத்த தீபத் திருநாளில் இலங்கை மக்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கக் கூடிய மிகச் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை ஏகோபித்து செயற்படுத்தவதற்கான அந்தச் செயற்பாட்டையும் செய்து முடிப்பதற்காக ஒரு சபதத்தை நாங்கள் இந்த நன்நாளிலே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எல்லா மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.