மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியில், யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கல்முனையில் இருந்து மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டுவந்தவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இதையடுத்து அவர் செங்கலடி வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்தவர் 51வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் அடையாளம் வெளியிட்டள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.