(சித்தா)
42 வருட காலம் கல்விச் சேவையாற்றி இன்றுடன் திரு.பூ.பாலச்சந்திரன் அவர்கள் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் கல்விப் பணியில் ஆசிரியராக, அதிபராக, ஓய்வு பெறும் வரை கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் நிகழ்வு இன்று போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது. ஓய்வு பெறும் இறுதிநாளான இன்று இவர் போரதீவுப் பற்றுக் கோட்டத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அதிபர்களுக்கான மதிய விருந்து உபசாரத்தினை ஏற்பாடு செய்திருந்தார். பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ரி.நித்தியானந்தம், பட்டிருப்பு கல்வி வலயக் கணக்காளர் திருமதி. எஸ். சிவகுமார்; நிதியுதவியாளர் திருமதி.வி.யோகலிங்கம், பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் திரு.சி.குருபரன், கணனி வள நிலைய முகாமையாளர் திரு.செ.திவ்வியராஜ், முன் பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ஜெயவரதராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.












