(ஜெ.ஜெய்ஷிகன்)
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தொகுதி உபகரணங்கள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டது.உதவிப்பிரதேச செயலாளர் எம்,ஏ.சி. றமீஸா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் எஸ.ஏ.றஹீம் , கிராம உத்தியோகத்தர் சப்றி, நிர்வாகத்திற்கான கிராம உத்தியோகத்தர் கபீர் மற்றும் கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பிர்தௌசியா மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
5 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியும், இருவருக்கு முச்சக்கரவண்டி மற்றும் வோக்கிங் பிறேம் போன்ற உபகரணங்களும் வழங்கி வைக்கப்ட்டதும் குறிப்பிடத் தக்கது.















