(ஜெ.ஜெய்ஷிகன்)கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இன்று(4) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்பிரதாயபூர்வமாக கொடி விற்பனை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு செயலகப் பிரிவில் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன், உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.நேசராஜா ஆகியோருககு சம்பிரதாயபூரவமாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அ.அழகுராஜ் , ஷியாம், மற்றும் சிறுவர் கழகப் பிரதிநிதி ஆகியோர் இணைந்து சிறுவர்தின கொடியை அணிவித்ததும் குறிப்பிடத் தக்கது.
ஒக்டோபர் மாதம் முழுவதும் சித்திரம், விவாதம், நடனம், வாசிப்பு, வினாவிடைப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.
முதியோர்களின் அருமை பெருமைகளை உணர்த்தும் வகையிலும் முதியோர்களின் வாழ்க்கை அனுபவங்களை இளையோருக்கு பரிமாற்றம் செய்யும் வகையிலும் முதியோர்தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. பாடசாலை மட்ட தெரிவுப் போட்டிகளில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத் தக்கது.



























