திருக்கோவிலில் யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்

(எஸ்.கார்த்திகேசு)

 அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரம்குடா பாவட்ட குளத்தடியில் கால்நடைகளை மேய்ந்துக் கொண்டு நபர் ஒருவர்    யானை தாக்கி  ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

பாடசாலை வீதி விநாயகபுரம் 2 லுள்ள தனது வீட்டிலிருந்து  நேற்று  புதன்கிழமை காலை வேலைக்காச் சென்ற வேளை குளத்தடியில் வைத்து யானை தாக்கியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்  நான்கு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணபிள்ளை சதாசிவம் (வயது 52)  என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.



இவ் மரணம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.