(ரவிப்ரியா )
பெரியகல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட எந்திரி பொன்னையா சுரேஸ் மீள்குடியேற்றம், புனரமைப்பு, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்றுள்ளமையை கௌரவிக்கும் நோக்கோடு, அவர் பாரியார் சகிதம் சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை கிராம மக்கள் சார்பாக, வரவேற்புவசாரத்தையும் கௌரவிப்பு விழாவையும், பிரமாண்டமாக அண்மையில் நடாத்தியது,
கல்வியில் தூக்க நிலையில் இருந்த கல்லாற்றுக்கு அரச உச்ச உயர் பதவியை தன் கல்வியாலும் திறமையாலும் இந்த மண்ணின் மைந்தன் பொறியியலார் சுரேஸ் பெற்றுக்கொண்டமையானது, பெரியகல்லாறு மக்களுக்கு ஒரு துடிப்பையும, தூண்டுதலையும்; புதிய தென்பையும் ஏற்படுத்தியது. அதை அவருக்கு அளித்த வரவேற்ப தெளிவாக உணர்த்தியது.
சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை வண்ணக்கர் மூ. முன்மதராஜா தலைமையில் நடாத்தப்பட்ட இவ்விழா நிறைவான நிரல்படுத்தலால் நிறைவைத் தந்தது. பண்பாட்டு மேளதாளத்துடன், பாடசாலை வாண்ட வாத்தியமும் முழங்க பூமாலைகள் அலங்கரிக்க அவரின் பூரிப்பு புன்னகையாக வெளிப்பட அதிதிகள் புடைசூழ மாணவிகள் மலர் மழை பொழிந்து வரவேற்க அவர் அடம் பிடித்த( தான் கற்ற பாடவாலையிலேயே தனக்கு கௌரவம் கிடைக்க வேண்டுமென்ற நன்றியுணர்வு) முற்றுப்பெறாத பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்திற்கு ஊரே கூடி உற்சாகப்பட அழைத்துவரப்பட்டார்.
அதிதிகள் பட்டியலில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீ பீடாதிபதி பிரதம விருந்தினராக டாக்டர் திருமதி ஏஞ்சலா அருட்பிரகாசம், இடம்பிடிக்க, விசேட அதிதிகள் வரிசையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், இந்துகலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன். ஓய்வுநிலை மகப்பேற்று நிபுணர் மண்ணின் மைந்தன் டாக்டர் சீ.தங்கவடிவேல், மற்றமொரு மண்ணிப் மைந்தன் மட்போதனா வைத்தியசாலை டாக்டர் செ.வாமதேவன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மண்ணின் மைந்தன் பொன் செல்வராசா ஆகியோர் இணைந்திருந்தனர்.
மற்றும் சிறப்பு அதிதிகளாக அதிபர் க.நல்லதம்பி. புhடசாலை அபிவிருத்திச் செயலாளரும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான மண்ணின் புதல்வி திருமதி சுஜாராஜினி வரதராஜன், மண்ணின் மைந்தர்களான கிராம உத்தியோகத்தர் செ.ஞானசிறி, பழையமாணவர் சங்க செயலாளரும் பொறியியலாருமான த.விவேக்சந்திரன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக மண்ணின் மைந்தர்களான ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலய தலைவரும் அதிபருமான சி.பேரின்பராசா. மற்றும் விஸ்வகீர்த்தி செ.கனகசுந்தரம் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர். எனினும் அழைப்பிதழில் குறிப்பிட்டவர்களில் கிறிஸதவ ஆலயங்களின் குருமார் இருவர் மட்டும் சமூகமளிக்காமை மட்டுமே சிறு வெற்றிடமாக தெரிந்தது.
அதிதிகள் மங்கல விளக்கேற்றல் சம்பிரதாயபூர்வமாக நடைபெற ,அதிலும் அதிதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இறுதியாகவே பெருந்தன்மைகாட்டி விளக்கேற்றினார் சுரேஸ.;இறைவணக்கத்தை( டாக்டர் வாமதேவன். தனதுரையில் பண்ணோடிசை பாடல் பற்றி தனத ஆதங்கத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது) தொடர்ந்து வரவேற்பு நடனம், அதிதிகள் உரை என்பன இடம்பெற்றது.
அமைச்சின் சார்பாக துறைநீலாவணை கோட்டைக்கல்லாறு. பேரியகல்லாறு ஆலயங்களுக்கு அமைச்சின் செயலாளா சுரேஸ் திணைக்கள பணிப்பாளர் உமாமகேஸ்வரன் சகிதம் நிதியுதவி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தன்னை கற்பித்த ஆசிரியர்களான சோ.கிருபைராஜா . மற்றும் திருமதி கனகநேசம் ஆகியோருக்கு தனது அன்றைய வகுப்பு நண்பர்கள் சகிதம் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவித்தார். இது தனது நெடுநாளைய ஆசை என்றும் குறிப்பிட்டார்.
சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம், கல்லாறு விளையாட்டுக் கழகம், பெரியகல்லாறு மத்திய கல்லூரி ,பெரியகல்லாறு சுவிஸ் ஒன்றியம் ஆகியவை சிறப்பான பாராட்டுப் பத்திரங்களை வாசித்து வழங்கி வைத்தன. அமைப்புக்கள் ரீதியாகவும். தனிப்பட்ட ரீதியிலும், குடும்ப ரீதியாகவும் அவருக்கு பலரும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். ஏற்புரையை அவர் கல்லாற்றின் கல்வியை கட்டியெழுப்புவதை மட்டுமே மையப்படுத்தி அழகாகவும, ஆழமாகவும். ஆற்றாமையுடனும் இயல்பான ஆதங்கத்துடனும், அடிமனது உணர்வுகளுடனும் பல்வேறு சுய அனுபவங்களையும் வெளிப்படுத்தி நிகழ்த்தினார்.
அவர் பற்றி அதிகளின் உரைகளிலிருந்து, இந்துகலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் -
சிறந்த பொறுப்புவாய்ந்த இந்த அமைச்சுக்கு பொ.சுரேசைவிட பொருத்மானவர்கள் இருக்கவே முடியாது.
பிரதம அதிதி கிழக்கு பல்கலைக்கழக வைத்திய பீடாதிபதி டாக்டா ஏஞ்சலா –
இங்கு பாராட்டப்படும் அமைச்சின் செயலாளர் என்ஜினியர் சுரேஸ் கடின உழைப்பாலும், மக்கள் சேவைமூலம் கிடைத்த கடவளின் அனுக்கிரகத்தாலும் இத்தகைய முதன்மை நிலையை அடைந்துள்ளார். இதற்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் -
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழரான பொறியியலாளர் சுரேசிற்கு முக்கிய அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமனம் வழங்கியிருப்பது அரசின் நல்ல செயற்பாட்டிற்கு அடையாளமாக இருக்கின்றது. இது எமத பிரதேசத்திற்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கு தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த கௌரவமாகவும் இருக்கின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா பொன் செல்வராசா-
கிழக்கிலங்கையில் பெரியகல்லாற்றிலிருந்து, முதலாவது சத்திரசிசிச்கை நிபுணர் டாக்டர் ஆறுமுகம், பேராசிரியர் வேலுப்பிள்ளை, மேலதிக அரசாங்க அதிபர் சங்காரவேல் ஆகியோர் வரிசையில் கிழக்கிலங்கையில் மூன்றாவது நபராக, அமைச்சின் செயலாளராக இடம் பிடித்துள்ளதன் மூலம் பொறியியலாளர்; பொன்னையா சுரேஸ் பாராட்டுக்குரியவர் ஆகின்றார்.
ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை வழங்கிய பாராட்டுப் பத்திரம பின்வருமாறு,-
அபார ஆற்றலும், அறிவும், அனுபவமும், அசாத்திய செயற்திறனும் அமையப்பெற்றதால்,
அருமையான அமைச்சின் நிரந்தர செயலாளராக நிறைகுடமாய் நிற்கின்றாய் நீ!
அழைப்புக்கள் உனக்கு சிங்கள, முஸ்லிம் அமைச்சர்கள் விடுக்கும் அளவிற்கு,
அபிமானம் பெற்றவனாக இருப்பது, இனத்துவ இலங்கையில் கின்னஸ் சாதனையன்றோ?
அனைத்து தமிழனையும் உன்; தகுதியால் தலைநிமிர வைத்திட்டாய் தனயனே!
அலங்கரிக்கின்றாய் தமிழ் தாயை உன் பதவி என்ற பட்டாடை - அணிவித்து,
அதற்கும் மேலாக பிறந்த மண்ணையே பிரமிக்க வைத்து பிரகாசம் அளிக்கின்றாய்!
அடுத்தடுத்து தமிழன் உயர் பதவிகள் உருவப்பட நீயே ஒரு உற்சாக ஊற்று எமக்கு!
அறிவு, அடக்கம், அனுபவம், நேர்மை. துணிச்சல். மக்கள் சேவைகளில் தனித்துவம்!
அலை கடல் கடந்தும் பெற்ற அபூர்வ பயிற்சிகளால், பட்டங்களால் நல்ல நிபுணத்துவம்.
அரிச்சுவடி அறிவித்த ஆசிரியர்களையும் மறக்காது நித்தம் நினைக்கின்ற விசுவாசம்!
ஆதிக காலம் மலையக மண்ணின் அரசனாக இருந்து பெற்ற நிறைவான விலாசம்!
ஆத்தனை துறைகளிலும் பிறந்த மண்ணை துல்லியப்புடுத்த துடிப்பான பிரயத்தனம்.!
அதிலும் கல்வியாறு பெயர் காக்க முனைப்பும் முன்னுரிமையும் கொண்ட தீவிரம்!
அல்லும் பகலும் அப்துல் கலாம் பாணியில் அபிவிருத்தி கனவுகளோடு சங்கமம்!
அப்பழுக்கற்ற அக்கறையுடன் அதற்கான முன்னெடுப்புக்களில் முயற்சிகளில் மும்முரம்!
அல்லற்படும் எமது மக்களின் சமூக விடிவிற்காக பதவி சமர்ப்பணம்!
அனர்த்தங்கள் இனியும் படுவான் எழுவானில் எழாதிருக்க திடசங்கர்ப்பம்!
அலுப்பேதுமின்றி அசுப்பில்லாமல் அவதானமாக காட்டுகின்றாய் சுபீட்சம்!
ஆகப்பை பிடிப்பவனாக ஆக்கிய ஆனைமுகனுக்கும் அளிக்கின்றாய் பல இலட்சம்!
ஆதிகார பீடத்தில் நீ அமர்ந்தாலும் உன்னிடம் அவதரித்ததில்லை அகம்பாவம்!
அனுபவித்து ஆளாவோம் என்ற ஆசை வளர்த்து அடைந்ததேயில்லை அவமானம்!
அரச பதவிக்கப்பாலும் சமூக அமைப்புக்களையும் இங்கழைத்து செய்வாய் அறிமுகம்!
ஆதன் பிரதிபலனாய் பிரதேசம் அடைந்தது பல்வேறு அடிப்படை வசதிகள் அரங்கம்!












