பட்டிப்பளைப் பிரதேசத்தில் சாதித்த முதலைக்குடா கனிஸ்ர வித்தியாலய மாணவன்


(சசி)
2017 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மண்முனைத் தென்மேற்கு கோட்டத்தில் 185 புள்ளிகளைப் பெற்று முதலைக்குடா கனிஸ்ர வித்தியாலய மாணவன் சிவசூரியம் சிவதர்ஷன் முதலிடத்தினைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

32 மாணவர்கள் மண்முனைத் தென்மேற்குக் கோட்டத்தில் சித்தியடைந்துள்ளனர்.
முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம் -09,
மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயம் -06,
அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் -06,
முதலைக்குடா கனிஸ்ர வித்தியாலயம் -04,
கொக்கட்டிச்சோலை ராமகிருஷண மிஷன் வித்தியாலயம் -02,
அரசடித்தீவு விக்கினேஸ்வரா வித்தியாலயம் -02,
கடுக்காமுனை வாணி வித்தியாலயம் -01,
படையாண்டவெளி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை  -01,
முனைக்காடு சாரதா வித்தியாலயம் -01

இப் பரீட்சையில் முதலிடத்தினைப் பெற்ற சிவதர்ஷன்  சித்தியினைப் பெற்றதற்கு காரணமான தனது பெற்றார்களான சிவசூரியம், தனுசியா ஆகியோருக்கும், தனது வகுப்பாசிரியர் திருமதி த.தவராசா, பாடசாலை அதிபர் அரசரெத்தினம் மற்றும் பாடசாலை நிருவாகத்தினருக்கும், முக்கியமாக தனது பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் பிரசாந்தன் ஆகியோருக்கு மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் எதிர்காலத்தில் தான் ஒரு வழக்கறிஞராக வந்து தனது பெற்றாருக்கும், பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

இவருக்கு battinews சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.