(அபூ முஜாஹித்)
பாலியல் குற்றங்களைப் புரியும் அதிபர், ஆசிரியர்களை காப்பாற்றும் முயற்சிகளில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் ஈடுபட்டு வருவது குறித்து கிழக்கு மாகாண நல்லாட்சிக்கும் கல்விக்குமான அபிவிருத்தி மன்றத்தின் சம்மாந்துறைக்கிளை தமது வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரை இது தொடர்பாக விசாரணைக்குட்படுத்தி இடமாற்றம் செய்ய வேண்டுமென அம்மன்றத்தின் தவிசாளர் ஏ.ஏ.கபீர் கேட்டுள்ளார்.
சம்மாந்துறை, வளத்தாப்பிட்டியிலுள்ள ஒரு முஸ்லிம் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றிய ஒருவர் அங்கு கடமையாற்றிய விஞ்ஞான ஆசிரியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பிணியாக்கியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரை அவ்வாசிரியை உட்பட பலர் கேட்டிருந்தும் வலயக்கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்காது அவ்வதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல உதவியதுடன் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான லீவையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை அல்-மனார் வித்தியலாய அதிபராகக் கடமையாற்றிய ஒருவர் 05ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாசப்படங்களைக் காட்டி பாலியல் சேட்டை செய்தபோது அதனை பெற்றார் கையும் களவுமாகக் கண்டுபிடித்து வலயக்கல்விப் பணிப்பாளரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறியபோது அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது முதலாம் தர அதிபரான அவரை சம்மாந்துறை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு இணைத்திருந்தார். ஏற்கனவே இப்பாடசாலை அதிபர் வளத்தாப்பிட்டி முஸ்லிம் பாடசாலையில் 05 பாடசாலைச்சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பாடசாலை அதிபர் சம்மாந்துறை நீதிமன்றத்தில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வார கால விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இவ்வழக்கில் ஒரு எதிரியாக பெயரிடுமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று சம்மாந்துறை அல்-அஸ்மான் வித்தியாலய அதிபராகக் கடமையாற்றியவர் பாடசாலைக்கு அருகேயுள்ள குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை கண்டுபிடித்த அயலவர்கள் கடுமையாக அவரைத்தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன் இவருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரைக் கோரிய போது அப்பாடசலையிலிருந்து அவரை இடமாற்றம் செய்து அவருக்கு பதவியுயர்வு வழங்குவது போன்று க.பொ.த (சா.த) வரையுள்ள ஒரு பாடசாலைக்கு இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தைச் சேர்ந்த இவரை இடமாற்றம் செய்துள்ளார்.
இதேபோன்று நாவிதன்வெளிக் கோட்டத்திலுள்ள அகத்தியர் வித்தியாலயத்தில் 02 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்து நாவிதன்வெளி அண்ணமலை மகா வித்தியாலயத்திற்கு அனுப்பியுள்ளார். இவ்வாசிரியருக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் அவர் எடுக்காது காப்பாற்றியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய இவ்வதிகாரி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிபர்களையும், ஆசிரியர்களையும் காப்பாற்றும் நோக்கில் தனது வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியை பயன்படுத்துவது குறித்து மிகக்கடுமையான நடவடிக்கையை கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கல்வியமைச்சு அதிகாரிகள் எடுக்க வேண்டுமெனவும், இவ்வாறான ஒரு அதிகாரியை சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்திருக்கக்கூடாதெனவும் கோரப்பட்டுள்ளது