ஒரு பயனாளி ஒரு தொழிலை மாத்திரம் நம்பி தனது ஜீவனோபாயத்தை கொண்டு செல்லக் கூடாது - உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் -

(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மிறாவோடை கிராமசேவகர் பிரிவில் சுயதொழிலை  மேற்கொண்டுவரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக 5  இலட்சம் ரூபாய் சுழற்சி முறையிலான கடன் வழங்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் வழிகாட்டலில் கறுவாக்கேணி சமூக பராமரிப்பு நிலையத்தில் இன்று(01.11.2017) காலை நடைபெற்ற நிகழ்வில், சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் சமுக பொருளாதார அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் லுசியா மற்றும் கள உத்தியோகத்தர், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உதவிப்பிரதேச செயலாளர் பயனாளிகள் மத்தியில் உரையாற்றுகையில் மிகக் குறைந்த வட்டி வீதத்தில் இக் கடனுதவி வழங்கப்படுகிறது. பிரதேச செயலகத்தில் மாத்திரமல்லாமல் மாவட்டத்திலும் சிறந்த நிதி நிறுவனமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பயனாளிகள் தெரிவு சிறப்பாக நடைபெறாத காரணத்தினால் தான் தையல் இயந்திரங்களும் மா, கொச்சிக்காய் அரைக்கும் இயந்திரங்களும் , பாரிய நிதியில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் முயற்சிகளும் முடங்கி கிடக்;கிறது. ஒரு பயனாளி ஒரு தொழிலை மாத்திரம் நம்பி தனது ஜீவனோபாயத்தை கொண்டு செல்லக் கூடாது. பல்வேறு தொழில் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.