வேலுபிள்ளை பிரபாகரனின் படத்தை காட்சிப்படுத்தி மாவீரர் தினத்தை கொண்டாடியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளதால் அந்த அமைப்பை நினைவுகூருவது சட்டத்திற்கு புறம்பான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே பிரபாகரனை நினைவுபடுத்தி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தமை மற்றும், பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு கேக் வெட்டியவர்கள் தொடர்பில் குற்றபுலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய குறித்த செயல்களில் ஈடுபட்டவர்களை தேவையேற்படின் கைது செய்யுமாறு பயங்கரவாத ஒழிப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த 26 ஆம் திகதி புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் அவரின் சொந்த ஊரான வல்வெட்டிதுறை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தரப்புக்களினாலும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.