தம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2017ம் ஆண்டின் விடுகை விழா

தம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2017ம் ஆண்டின் விடுகை விழா  நிகழ்வானது குருதேவர் பாலர் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர்  திரு.பா.சந்திரேஸ்வரன் அவர்களின் தலைமையில் திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் ஒன்றுகூடல் மண்டபத்தில் 2017.12.22 நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளைநாயகம் அவர்களும் மாண்புறும் அதிதிகளாக கல்முனை(வடக்கு)  ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஆறு.முரளீஸ்வரன்    அவர்களும் மற்றும் கௌரவ அதிதியாக  கிழக்கு மாகாண முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திரு.பி.மோகனதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர்  திரு. எச்.எம்.பிரசன்ன ஹேரத், தம்பிலுவில் திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் திரு.வ.ஜயந்தன்,  தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் ஆகியோருடன்  விசேட அதிதிகளாக திருக்கோவில் சுகாதார வைத்திய பணியகத்தின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் திரு.க.லோகிதகுமார்,  பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்  திருமதி. ஜி.ருபன், சுவாட் அமைப்பின் திருக்கோவில்   பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. நி.ஜீவகுமார்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 மேலும் அடுத்த வருடம் தரம் ஒன்றிற்கு(01) செல்லவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு அதிதிகளினால்  விருதுகளும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது .

அத்துடன் இவ்  விடுகை விழாவில் குருதேவர் பாலர் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுக்கும் இடம் பெற்றது. மேலும் இன் நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பாலர் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.