மட்டக்களப்பு, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயதுச் சிறுமி, நேற்று (27) மரணமடைந்துள்ளாரென, சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸுர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 2 இல் கற்கும் முஹம்மத் இஸ்மாயில் பஸாத் ஐனி (வயது 7) என்ற சிறுமியே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.
இச்சிறுமி, கடந்த 3 தினங்களாக டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.