மட்டக்களப்பில் பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞர் பலி

சத்துருக்கொண்டானில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

சத்துருக்கொண்டான்  பிரதான வீதியில் வாழைச்சேனை இருந்து வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுளளது . இதன் போது கூழாவடியை சேர்ந்த 25  வயதுடைய  ரிஷி எனும்  இளைஞர் உயிரிழந்துள்ளார் .

பஸ் சாரதி தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர் .


  எமது ஆழ்ந்த அனுதாபங்கள்